நமது மூதாதையர்கள் முதல் இப்போதையவர்கள் வரை பசுக்களை தெய்மாக பாவித்து வந்த நிலையில், ஒரு பசு மருத்துவராகவும், அதில் இருந்து வெளியேறும் கோமியம், பசுஞ்சாணம் உள்ளிட்டவைகள் மருந்து பொருட்களாகவும், விளங்கி அமெரிக்க இளைஞனை காப்பாற்றிய நிஜக் கதை ஒன்று நடந்துள்ளது.
அதைப்பற்றி பார்ப்போம்
அமித் வைத்யா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர் 27 வயதிலேயே தொழில் ரீதியில் மிக உயர்த நிலையை அடைந்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்ந்தவன் .சுறுசுறுப்பான வாழ்க்கையானாலும் ஆரோக்யமான வாழ்க்கை அல்ல. வயதுக்கு மீறிய சாதனை செய்தவன் . "என்னுடைய கனவுகளெல்லாம் என்னுடைய தந்தை இறந்த சில மாதங்களுக்கு பின்னர் எனக்கு முதல் நிலை புற்றுநோய் தாக்கி உள்ளது என்று கண்டுபிடித்ததற்கு பின்னால் தகர்ந்தது". நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன். சிலமாதம் ஓரளவு உடல் நிலை சரியாக இருந்தது. ஆனால் தீடீர் என்று என்னுடைய அம்மாவுக்கும் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக சில நாட்களில் உயிர் இழந்தார். அதற்கு பிறகு எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவ ஆரமித்தது. குடலில் பரவிய அது வேகமாக என்னுடைய நுரையீரலையும் பதம் பார்த்தது. ஒரே பிள்ளையான நான் தனிமையாக உணர்ந்தேன். மருந்துகளையும் மாத்திரைகளையும் என்னுடைய உடல் ஏற்க மறுக்கிறது என்றும் நான் இன்னும் சிறுது நாட்களில் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். முதலில் அச்சப்பட்ட நான் பின்பு என்னுடைய பெற்றோர்களை பார்க்க போகிறோம் என்று தேற்றிக்கொண்டேன். என்னுடைய மரணதிற்க்கான ஏற்பாடுகளை நானே செய்தேன்.
இறப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்களை சந்திக்கும் ஆவலில் இந்தியாவிற்கு கிளம்பினேன். உடல் இருக்கும் நிலையில் இந்திய மண்ணில் என்னுடைய கால் படுமா என்று தெரியவில்லை. வந்து சேர்ந்தேன். உறவினர்கள் என்னுடைய நிலைமையை நினைத்து வருந்தினார்கள். அவர்களில் ஒருவர் மாற்று மருத்துவம் ஒன்று புற்றுநோய்க்கு குஜராத்தில் உள்ளதாகவும் செலவே இல்லாததாகவும் சொன்னார்கள். இறப்பின் விளிம்பில் இருக்கும் நான் சரி பார்போம் என்று அங்கு சென்றேன். யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. வெறும் வயிறில் நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசும் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் அடங்கிய பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டது..கீமோ தேரோபியில் அத்தனை சுவையையும் இழந்த நான் நம்பிக்கையோடு அதை அருந்தினேன். சிலநாட்களில் என்னுடைய புற்றுநோய் பரவாமல் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொன்னது. 40 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை தொடர முடிவு செய்தேன். அங்கே ஒரு விவசாயி எனக்கு தன்னுடைய வீட்டில் சிறிய அறையை கொடுத்தார். கூடவே அன்பையும் கொடுத்தார். சில நாட்களில் என்னுடைய புற்றுநோய் குறைந்து இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் சிறிது நடக்க துவங்கினேன் பின்னர் நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது, நடந்த நான் ஓடத்துவங்கினேன், என்னுடைய இருண்ட வாழ்கையில் மகிழ்ச்சியை உணர துவங்கினேன். 18 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் எனக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகியது.
மரணத்திற்கான ஏற்பாடுகளை செய்த நான் வாழ்வதற்காக ஏற்பாடுகளை துவங்கினேன். தற்போது "ஹீலிங் வைத்யா" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் பாதிக்க பட்டவர்களுக்காக பணியாற்றிக்கொண்டிருகின்றேன். நான் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்ப வில்லை. எனக்கு இந்தியா நிறைய கொடுத்துள்ளதை உணர்ந்துள்ளேன். அதே நேரத்தில் இந்திய மக்கள் இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன்..
தற்போது புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.....
புனித புற்றுநோய் --- புற்றுநோயிலிருந்து என்னை காப்பாற்றிய பசு என பசுவை மனதார பாராட்டியுள்ளார். பசுவை தெய்வமாக பார்த்தவர்கள் மத்தியில் பசு ஒரு மருத்துவராகவும், அதன் பொருட்களில் இருந்து வந்த கோமியம், பசுஞ்சாணம் ஆகியவற்றைகளை மருந்து பொருட்களாகவும் கொண்டு ஒருவர் உயிர் பெற்றுள்ளார் என்பது பெரும் புண்ணியம் வாய்ந்த செயல் ஆகும்.
No comments:
Post a Comment