Saturday, 19 September 2015

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கரூர் தாந்தோன்றி மலை பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது



தென் திருப்பதி
என்றழைக்கப்படும் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யான வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி
முதல் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் குவிந்தன


கரூர் அருகே உள்ள
தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலானது குடவறை கோயில்
என்றும், வைணவ தலங்களில் புகழ்பெற்ற கோயில் ஆகவும் பக்தர்கள் இன்று வரை கருதி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கபடும் இக்கோயிலானது ஓவ்வொரு புரட்டாசி
மாதமும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும், இந்த நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான
இன்று காலை 6 மணி முதல் நடைதிறந்தது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கரூர்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமில்லாமல், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர்
உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பெருமாளை தரிசித்தி செல்கின்றனர். மேலும் கோயில் நுழைவு
வாயிலிலேயே சங்கூதிகளின் சத்தம் காதை பிளக்க வைக்கும் அளவிற்கு பக்தி மெறுகேறியது.
பூம்பூம் மாடு என்றழைக்கபடும் சாமி மாடுகளும் அங்கே வருகை புரிந்துள்ளதால் பக்தர்கள்
அம்மாடுகளையும் கும்பிட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள இக்கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment