Saturday, 19 September 2015

என மகளின் உடலை வாங்க வேண்டுமானால் சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே வாங்குவோம் - மர்மமான முறையில் உயிரிழந்த டி.எஸ்.பி யின் தந்தை ரவி கண்ணீர் பேட்டி




என் மகளின் உடலை வாங்க வேண்டுமானால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமெனவும், அப்போது தான் என் மகளின் உடலை வாங்குவோம் என மர்மமான முறையில் உயிரிழந்த டி.எஸ்.பி. விஷ்னுப்பிரியாவின் தந்தை ரவி கண்ணீர் பேட்டியளித்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
மகள் விஷ்னுபிரியா இறப்பு குறித்து, அவரது தந்தை ரவி இன்று சேலம் அரசு மருத்துவமனையில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:- 

என்னுடைய மகள் நேர்மையான, தைரியமானவள். குடும்ப பிரச்சினை ஏதுவும் காரணம் இல்லை. காதல் விவகாரமும் எதுவும் இல்லை. திருமணம் பற்றி கேட்டப்போது, உடனே மாப்பிள்ளை பாருங்கள் என்றும் எந்த தடையும் தெரிவிக்கவில்லை. மகள் சாவை திசை திருப்புவதற்காகவே குடும்ப சூழ்நிலை என்று அவர்கள் (போலீஸ் அதிகாரிகள்) தெரிவிக்கின்றனர். 

ஆனால் அது மாதிரி எதுவும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார், மன உளைச்சலுடன் காணப்பட்டார். என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரப்பிலும், யுவராஜ் தரப்பிலும் டார்ச்சர் இருந்து வந்தது. அவர் தற்கொலை செய்தபோது 15 பக்கம் கொண்ட கடிதம் எழுதியிருந்ததாக கூறினார்கள். ஆனால் என்னிடம் 4 பக்கம் மட்டும் காண்பித்தார்கள். அது என்னுடைய மகள் கையெழுத்து என்று தான் கூறினேன். மீதி உள்ள பக்கங்களை என்னிடம் காண்பிக்க வில்லை. 

இது குறித்து விசாரணை நடத்த உள்ளூர் போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். நடத்தினால் தான் உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment