கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், குறிக்காரன்வலசு, சின்னகரியாம்பட்டி பகுதியில் கூட்டுறவு துறையின் மூலம் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடைகள் துவக்கவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பகுதி நேர நியாயவிலைக்கடைகளை திறந்து வைத்து தெரிவிக்கையில்
அரவக்குறிச்சி வட்டம், குறிக்காரன்வலசு, சின்னகரியாம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இப்பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளை திறக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் இப்பகுதியில் தற்பொழுது துவக்கிவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு என்பது மிக அவசியமான ஒன்றாகும், அதை எவ்வித தங்குதடையின்றி வழங்கவேண்டும் என்பதே அம்மாவின் நோக்கமாகும். அதற்காகவேதான் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்ததுடன் மேலும் நியாய விலைக்கடையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணை , மண்ணெண்ணை போன்ற பொருட்கள் வழங்கி வருவதுடன் மேலும் மக்களுக்கு இரும்பு சத்தான உப்புகளையும் வழங்கவேண்டும் என்பதற்காக அம்மா உப்பு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதுடன் அம்மா உணவகம், அம்மா குடிநீர், வழங்க உத்தரவிட்டு வழங்கப்பட்டுவருகின்றன. இவைகள் அனைத்தும் தங்கள் பகுதிகளிலேயே கிடைத்தால் மேலும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற நோக்குடன் சிறு கிராமங்களில் கூட நியாய விலைக்கடைகளை துவக்கி தேவையான உணவுப்பொருள் வழங்கவேண்டுமென உத்தரவிட்டு அதனடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.
இதன்மூலம் இப்பகுதியில் உள்ள மக்கள் 3 கிலோ மீட்டர் சென்று நியாய விலைக்கடைக்கு சென்று வந்த நிலையை மாற்றி உங்களுடைய நேரம் விரையம் ஆவதை தவிர்த்து இன்று முதல் உங்கள் ஊரிலேயே உங்களுக்குத்தேவையான பொருட்களை உடனடியாக பெற்றுக்கொள்ளுகின்ற வகையில் அமைவதுடன் மட்டுமின்றி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் உங்களுக்காக பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே இல்லாத அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கப்பட்டுவருகிறது. என்னைப்போன்ற மக்கள் பிரதிநிதிகள் வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்குள்ள பொதுமக்கள் உங்கள் மாநிலத்தில் மட்டும் முதல்வர் அவர்கள் எப்படி விலையில்லா அரிசி வழங்கி வருகிறார்கள் என ஆச்சரியமுடன் கேள்வி கேட்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்தியாவிற்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்கின்ற ஒரே முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்தான். எனவே பொது மக்கள் அரசின் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயுபுரம் சட்டமன்ற உறுப்பினர் செ.காமராஜ், கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் சந்தானம், துணை இயக்குநர் அபிராமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய குழுத் தலைவர் ராமலிங்கம், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் மணிகண்டன். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குருசாமி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment