Friday, 18 September 2015

குளத்தை காணவில்லை என திரைப்படத்தில் வடிவேலு கூறியது போல ஒரு வாய்க்காலின் புதிய ஷட்டரை காணவில்லை என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு திரைப்பட நடிகர் ஒருவர் கொடுத்த புகாரால் பரபரப்பு



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியை சார்ந்தவர் திரைப்பட நடிகரும், மாற்றுத்திறனாளியுமான நாகராஜ், சஹானா டிரஸ்ட், டாக்டர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு பல்வேறு பிரச்சினைகளை ஆங்காங்கே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாராக அளித்து தீர்த்து வந்த நிலையில் இன்று நடைபெற்ற கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலாலாபேட்டை பகுதியில் மருதாண்டான் வாய்க்காலில் புதிதாக அமைக்கப்பட்ட ஷட்டரை காணவில்லை எனவும், ஷட்டரை கண்டுபிடித்து தருமாறும் கேட்டுக் கொண்டு மனு கொடுத்ததோடு, ஷட்டரை கணவில்லை என போர்டுகளை கையில் ஏந்தி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி : நாகராஜன், மாற்றுத்திறனாளி – திரைப்பட நடிகர் -- இலாலாபேட்டை

No comments:

Post a Comment