Tuesday 25 August 2015

கோவையில் தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: முதலில் 7 பேர் பலி - மேலும் 25 பேர் படுகாயம்

ஈரோடிலிருந்து, கோவைக்கு இன்று (25-8-2015) காலை கே.கே.சி., என்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் பை-பாஸ் ரோட்டில் பழங்கரை அருகே வந்த பொது மன நோயாளி ஒருவர் குறுக்கே வந்ததாக தெரிகிறது. அவர் மீது மோதாமலிருக்க டிரைவர் பஸ்-சை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து உருண்டது. அளவுக்கதிகமாக பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் பஸ்ஸில் பயணம் செய்த 6 பேர், ரோட்டின் குறுக்கே வந்த மன நோயாளி ஒருவர் என மொத்தம் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்கள். பலியானவர்கள் விவரம் :-
1) திருப்பூர் புதுப்பாளையம், ஊத்துக்காட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக்(வயது 18) .( இவர் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாமிநாதனி சொந்த அண்ணன் மகன்.)
2) நாமக்க்கல்லை சேர்ந்த ஆறுமுகம் மனைவி யமுனா(40).
3)நாமக்கல் சீதாராமம்பாளையத்தை சேர்ந்த பார்த்தசாரதி (32). இவர் சக்தி எஞ்சினியரிங் கல்லூரி உதவி -பேராசிரியர்
4)டெல்லியை சேர்ந்த வினித் அகர்வால் மகன் தர்ஷ் அகர்வால் (6). தற்போது ஈரோடு மோசி கார்னரில் வசித்து வருகிறார்கள்.
5)பஸ்-சின் குறுக்கே வந்த மன நோயாளி (யார் என்று அடையாளம் தெரியாதவர்).
மேலும் இருவர் யாரென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விபத்தில் மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.





No comments:

Post a Comment