Sunday 30 August 2015

மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது - பீகாரில் காங்கிரஸ் தலைவர்சோனியா குற்றச்சாட்டு


பாட்னா : பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசி வருகிறார். நிதிஷ்குமாரை தங்கள் முதல்வராக பீகார் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என சோனியா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமானது.  பீகாருக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மேம்பாட்டுக்கு பெரும் பங்காற்றியவர் லாலுபிரசாத் யாதவ் தான் என சோனியா காந்தி கூறியுள்ளார். நரேந்திர மோடி அரசு ஊழலில் சிக்கித் தவிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் கொள்கைகளால் நாட்டில் விலைவாசி அதிகரித்துவிட்டது. ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும் மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என சோனியா பேசியுள்ளார்.

நரேந்திர மோடி அரசின்  கொள்கையால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்பான மோடி அரசின் உக்தியும் தோல்வி அடைந்துவிட்டது என்று பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், பேரணியில் சோனியா காந்தி பேசியுள்ளார்.

No comments:

Post a Comment