திருச்சி ஜமால்
கல்லூரியில் பயின்று வரும் பள்ளப்பட்டியை சார்ந்த சித்திக் அலி, தென்காசியை சார்ந்த
அக்பர் பாதுஷா (21), திண்டுக்கல்லை சார்ந்த நஸ்ரூதின் (வயது 21), இந்த மூவரும் கரூர்
அருகே உள்ள குளித்தலை சபாபதி தெருவில் வசிக்கும் ஆசிக் என்பவரின் உறவினர் வீட்டிற்கு
விருந்திற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில்
முன்புள்ள காவிரி ஆற்றின் கரையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு அதிகளவில் மணல்
அள்ளப்படுவதாலும், ஆடிபட்டத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரினாலும், அங்கு ஏற்பட்டிருந்த
புதை மணலில் சிக்கி ஒருவர் பின் ஒருவராக சென்று குளித்துள்ள நிலையில் மூன்று பேரும்
அடுத்தடுத்ததாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவரை காப்பாற்ற சென்ற மூவர்களும் உயிரிழந்த
சம்பவத்தை தொடர்ந்து முசிறி தீயணைப்பு படையினர் விரைந்து பிரேதங்களை கைபற்றி குளித்தலை
அரசு மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர். 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில்
அடுத்தடுத்தாக பிரேதங்களை கைபற்றிய சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து குளித்தலை டி.எஸ்.பி. ஜமீம், இன்ஸ்பெக்டா் குருநாதன், கோட்டாட்சியா் சக்திவேல், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனா்.
3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment