குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக பழையாற்றில் உள்ள பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன இந்த பணிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற சட்ட மன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை. பா.ஜ கூட்டணி நேர்மையான ஆட்சி அமைக்கும். தேமுதிக மற்றும் பாமக ஆகியன பா.ஜ கூட்டணியில் இல்லை என அறிவிக்கவில்லை.
எனவே அவர்கள் எங்கள் கூட்டணியில் இருப்பதாக நம்புகிறோம். சமஸ்கிருதம் படிப்பதை வரவேற்கிறேன். எந்த மொழியையும் கற்பதில் தவறில்லை. தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைவது பற்றி பிரச்னையில்லை. ஆனால் குளச்சலில் வர்த்தக துறைமுகம் வந்தே தீரும். இலங்கையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதால் அதில் இங்குள்ள கட்சிகள் அரசியல் செய்ய முடியவில்லை.
இலங்கையில் தமிழர்கள் நலனுக்கு தேவையானவற்றை பிரதமர் மோடி உறுதிபட செய்து வருகிறார். இன்னும் 7 மாதங்களில் சுசீந்திரம் பாலப் பணிகள் நிறைவு பெறும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இளங்கோவன் மீது தாக்குதல் நடத்துவது வருந்தத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment