Monday 31 August 2015

முற்றுகையிட முயன்றது தப்பா ? அமைச்சர் வீடு முற்றுகையிட ஆலோசனை நடத்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு 2ம் நாளாக வீட்டுக்காவல்


அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட ஆலோசனை நடத்திய தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் உள்பட 5 பேர் இன்று 2 வது நாளாக வீட்டு காவல் வைக்கப்பட்டுள்ளனர்.சட்டசபையில் வேளாண் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது, ‘’ தமிழகத்தில் வறட்சி இல்லை’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த 28ம் தேதி திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கத்தினர் வாயில் கறுப்பு துணி கட்டி அமைச்சருக்கு எதிர்ப்பு காட்டினர்.இந்த நிலையில் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட போவதற்கான அவசர ஆலோசனைக் கூட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மண்ணச்சநல்லூர் வனத்தாயி அம்மன் கோயிலில் நேற்று மாலை நடந்தது. ,இதில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி கென்னடி தலைமையிலான போலீசார்  வந்தனர். கூட்டத்தை கலைக்குமாறு அய்யாக்கண்ணுவிடம் கூறியுள்ளனர். இதனால்  அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அய்யாக்கண்ணு, மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் கருப்பயைா பிள்ளை, மண்ணச்சநல்லுார் ஒன்றிய ெசயலாளர் சதாசிவம், ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன் ஆகிய 5 பேரை திருச்சி கரூர் பைபாஸ் ரோடு அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு 5 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ரங்கம் உதவி கமிஷனர் கபிலன் தலைமையிலான போலீசார் வீட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2வது நாளாக 5 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் மத்தியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி கடந்த மார்ச் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட சென்னை செல்வதற்கு தயாராக இருந்த விவசாயிகள் ஏப்ரல் 1ம் தேதி இரவு வரை சிறை வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment