Sunday 23 August 2015

அலைசறுக்கு விளையாட்டின் தந்தைக்கு கூகுள் நிறுவனம் டூடுள் போட்டு பர்த் டே கொண்டாடியது சர்ஃபிங் விளையாட்டை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரை பெருமைப்படுத்திய கூகுள்






அலைசறுக்கு எனப்படும் சர்பிங் விளையாட்டானது மரத் தக்கையால் செய்யப்பட்ட பலகையின் மீது ஏறி நின்று, சீறும் அலைகளை எதிர்த்து முன்னேறி நகர்ந்து செல்லும் நீர் விளையாட்டு. இந்த விளையாட்டின் தந்தை டியூக்கின் பிறந்த நாளை இன்று கூகுள் தனது வழக்கமான பாணியில் கொண்டாடுகிறது.

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் ஹோனுலுலுவில் 1890-ல் பிறந்த டியூக் கஹானமோக்கு என்பவர் ‘சர்ஃபிங்’ விளையாட்டின் தந்தை என்று அமெரிக்கர்களால் கருதப்படுகிறார்.

சிறுவயதிலிருந்தே நீச்சல் வீரராக இருந்த டியூக், அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்று ஐந்து முறை பதக்கம் வென்றிருக்கிறார். இவர் குடியிருந்த பகுதியில் பதிமூன்று முறை ‘ஷெரிஃப்’ (நகரத்தலைவர்) பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சுமார் இருபது சினிமா மற்றும் டாக்குமெண்டரி படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது கடும் முயற்சியாலேயே அமெரிக்காவின் ஒரு சிற்றூராக இருந்த ஹவாய், பின்நாளில் மாநில அந்தஸ்தை அடைய முடிந்தது. இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரான டியூக் கஹானமோக்கு, உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து, ‘சர்ஃபிங்’ விளையாட்டினை உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற தனிப்பெரும் புகழைப் பெற்றுள்ளார்.

அமெரிக்கர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் டியூக்கின் நூற்று இருபத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கூகுளின் மேட் க்ரூய்க்‌ஷான்க் என்கிற கலைஞர், டியூக் கஹானமோக்கு-வின் முகத்தை மற்றும் சர்ஃப் போர்டுடன் ‘டூடுள்’ செய்துள்ளார்.

இன்று கூகுள் தேடுதளத்தில் அந்த டூடுள் இடம்பெற்று, டியூக் கஹானமோக்கு-வின் சாதனையை உலக மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றது.



No comments:

Post a Comment