Wednesday 26 August 2015

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் : திருமாவளவன் உண்ணாவிரதத்தில் வைகோ, கிருஷ்ணசாமி, முத்தரசன் பங்கேற்பு

ஆந்திராவில் 20 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட போது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று (26-08-15) உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 9 மணிக்கு அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அவருடன் கட்சி நிர்வாகிகள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, இளஞ்சேகுவேரா, பாலசிங்கம், பார்வேந்தன், வி.கோ.ஆதவன் உள்ளிட்ட தொண்டர்கள் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
திருமாவளவன் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ஆர்.முத்தரசன் ஆகியோர் அங்கு சென்றனர். திருமாவளவனின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து மிக விரைவில் பல்வேறு போராட்டங்கள் அந்த அப்பாவி இருபது தமிழர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவத்தையடுத்து நடத்த உள்ளதாகவும், அது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றார். மேலும் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உண்ணாவிரதத்தை சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment