கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர்
கொங்கு சகோதயா¡ கூட்டைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கல்ச்சுரல் பியஸ்டாவில், வில்லுப்பாட்டில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மூன்றாம் பரிசும், 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் பரிசும், குழு நடனப் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் - 2015 போட்டியில் தனி நடனம், வார்த்தை கண்டுபிடித்தல், கட்டுரை போட்டி ஆகிய பிரிவுகளில் முதல் பரிசும் பெற்றனர். மேலும் சின்மயா மிஷன் நடத்திய பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமைதாங்கி பரிசுகளை வழங்கி பாராட்டினார். பரணிபார்க் கல்விக்குழுமத்தின் செயலாளர் திருமதி.பத்மாவதிமோகனரெங்கன் மற்றும் பரணி வித்யாலயா பள்ளி முதல்வரும், கொங்கு சகோதயா கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் C.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணிவித்யாலயா பள்ளியின் முதல்வர் திருமதி.S.சுதாதேவி வரவேற்புரையாற்றினார். பரணிவித்யாலயா பள்ளியின் துணை முதல்வர் திருமதி.R.பிரியா நன்றிரையாற்றினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக்குழுமத்தின் நிர்வாக அலுவலர் M.சுரேஷ் செய்திருந்தார்.
புகைப்படம்: மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன், மற்றும் பரணி வித்யாலயா பள்ளி முதல்வரும், கொங்கு சகோதயா கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் C.ராமசுப்பிரமணியன்.
No comments:
Post a Comment