தூத்துக்குடி பங்களாவில் விபசாரம் 3 ஆந்திர பெண்கள் சிக்கினர்: கார் , செல்போன் பறிமுதல்
தூத்துக்குடி பங்களாவில் விபசாரம் செய்ததாக ஆந்திர அழகிகள் 3பேரும் புரோக்கரும் சிக்கினர். இதையொட்டி கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பங்களா முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஒருவருடையதாகும். அதை ரூ. 15ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவர்தான் புரோக்கராக செயல்பட்டுள்ளார். அந்த 3பெண்களையும் மீட்டு பெற்றோர் மற்றும் கணவரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் அங்குள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 4செல்போன் மற்றும் ஆம்னி காரை போலீசார் கைப்பற்றினர்.
தூத்துக்குடி புறநகர் பகுதி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. வசதி படைத்தவர்கள் வீடுகளை கட்டிபோட்டு அதை வாடகைக்கு விட்டுவிட்டு அவர்கள் வெளியூர்களில் உள்ளனர். இதனால் இங்கு விபசார தொழில் பெருகி உள்ளது. இதுபோன்று புறவெளி பகுதியில் உள்ள பங்களாக்களில் தொடர்ந் துவிபசாரம் நடப்பதாக தெரிகிறது. போலீசார் அதிரடி சோதனை போடவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment