Friday 28 August 2015

ஓணம் பண்டிகை எதிரொலி: கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஓணம் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல், மூணாறு, தேக்கடி மற்றும் ஊட்டி ஆகிய சுற்றுலா தலங்களில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டி,
கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் காலம் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கேரள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, படகு குழாம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, குணாபாறை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குவிந்திருந்தனர். கொடைக்கானலில் தற்போது மிதமான சீதோசனம் நிலவி வருகிறது. பகல் பொழுதில் வெயில் இருந்தாலும் மாலையில் குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. எனவே இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சுற்றுலாவினர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல கேரளா மாநிலமான மூணாறு, தேக்கடி பகுதியிலும் இதே போல நிலைமை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதே போல நிலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலுக்கு நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment