Friday 28 August 2015

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: நீதிபதி ரகுபதி ஆணைய அறிக்கையில் குளறுபடிகள் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கை, பல குளறுபடிகளுடன் அரசைக் காப்பாற்றும் வகையில் உள்ளதாக சட்டப்பேரவை திமுக குழு தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்றும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் அளித்துள்ள அறிக்கை குறித்து சட்டப்பேரவை யில் பேச அனுமதிக்கவில்லை. இந்த அறிக்கை பல குளறுபடி களுடன் முழுமை பெறாமல் உள்ளது. சிஎம்டிஏ அதிகாரிகளை விசாரித்ததற்கான எந்த ஆதாரமும் அறிக்கையில் இல்லை.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றச் சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், விதிகள் மீறப்பட்டதை சிஎம்டிஏ கண்காணித்ததா, இல்லையா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. அறிக்கையின் 224-ம் பக்கத்தில், கட்டிட விபத்து நடந்த பகுதியில் துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அரசை காப்பாற்றும் வகையில் அந்த அறிக்கை உள்ளது. அறிக்கையின் இணைப்பு இதழை (Annexure) கேட்டு தலைமைச் செயலாளருக்கும், சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் சேஷச முத்திரத்தில் தேர்த் திருவிழாவில் நடந்த கலவரத்தால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி, அங்கு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்பதை பேரவையில் வலியுறுத்த நினைத்தோம். அதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
“நீதிபதி ரகுபதி ஆணை யத்தின் அறிக்கை முறைகேடாக உள்ளது என்று கூறுகிறீர்களே, அது தொடர்பாக வழக்கு தொடர் வீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, “அதுபற்றி எங்கள் வழக்கறிஞர்கள் ஆலோசிப் பார்கள். வழக்கு தொடர வேண்டிய நிலை இருந்தால் அதைச் செய்வோம்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்

No comments:

Post a Comment