பொன் விதியா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் ( C B S E
) கோலாகலமாக ஓணம் பண்டிகை விழா கொண்டாட்டங்கள்
நடைப்பெற்றது. பள்ளியின் தலைவர் சத்தியநாராயணன், செயலாளர் நித்தியானிந்தி, முதல்வர் பாபு ஆகியோர்கள் முன்னிலையில் இறைவணக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இப்பள்ளியின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவி சூர்யா வரவேற்புரை வாசித்தார் .
மேலும் பத்தாம் வகுப்பு மாணவி ஜின்சி பெசிலியா ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம்
பற்றியும், சிறப்பம்சம் பற்றியும் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து பத்தாம்
வகுப்பு மாணவன் ஜானகி ராம் மகாபலி கதாபாத்திரத்தில் வந்தது கண்களுக்கு விருந்தாக
அமைந்தது. இரண்டாம் வகுப்பு சிறுவர் சிறுமியர்களின் அறுவடைக் கால நடனமும்,
ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகள் ஆடிய நடனமும், பத்தாம் வகுப்பு மாணவிகள் திருவாதிரை
நடனமும், மாணவர்கள் வஞ்சிப்பாட்டு
மற்றும் புலிக்களி நடனமும் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து பொருளியல் துறை ஆசிரியர் பிரதீப் குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஓணம்
பண்டிகைப்பற்றி சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் பள்ளியின் தலைவர் செயலாளர், , முதல்வர்,
ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment