Thursday 27 August 2015

அ.தி.மு.க.வினரை தடுக்க தவறி விட்டனர்: போலீசாரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து ஐகோர்ட்டில் முறையிடுவேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன்

மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இன்று, கையெழுத்து போட்டு திரும்பிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கொலை மிரட்டல் தொடர்பாக ஒரு பொய் புகாரின் அடிப்படையில் என் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார் குறித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் காரணமாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்துள்ளேன்.
ஓட்டலில் தங்கி இருந்த என்னிடம் போலீஸ் அதிகாரி, அ.தி.மு.க.வினர் உங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்போது செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். போலீசார் எனக்கு பாதுகாப்பு தரவில்லை. அது பற்றி கவலை இல்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
போராட்டத்தில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரை தடுத்து நிறுத்துவதை விடுத்து, என்னை தடுப்பதிலேயே போலீசார் குறியாக இருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வர நேரிட்டது. போலீசார் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்திவிட்டு எனக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்ற எனக்கு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஒரு நாற்காலி கூட தரவில்லை. காலம் ஒரு நாள் மாறும்.
மதுரை போலீசாரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து ஐகோர்ட்டில் முறையிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment