கடந்த மாதம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த சசி பெருமாளுக்கு கள் வைத்து அஞ்சலி செலுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறியதால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ, தே.மு.தி.க விஜயகாந்த் ஆகியோர் நேரிடையாகவே போராட்டக் களத்தில் ஈடுபட்டனர். இவரது மரணத்தை தொடர்ந்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி இது போன்ற கட்சிகள் தீவிரமாக போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர். மதுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த சசிபெருமாளுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதேபோல் ஈரோட்டில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சசிபெருமாளின் படத்துக்கு முன், ஒரு களையத்தில் கள், பனம்பழம் ஆகியவை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசும் போது , கள்ளுக்கு ஆதரவாக சசிபெருமாள் இருந்ததாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த பிரச்சினை விஸ்வரூபமெடுக்க, இந்நிலையில், மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த சசிபெருமாளுக்கு கள் படையலாக வைத்து அஞ்சலி செலுத்தியதற்கு அவரது குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிபெருமாளின் மகன் விவேக், ''எனது தந்தை கடந்த 1973 ஆம் ஆண்டிலேயே கள்ளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர். எனது தந்தை என்றுமே கள்ளுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை. எனது தந்தையின் மரணத்தை கொச்சைபடுத்தும் வகையில் நல்லசாமி செயல்பட்டுள்ளார் '' என்றார்.
சசிபெருமாள் இறந்ததையடுத்து பல்வேறு போராட்டங்களை ம.தி.மு.க, தி.மு,க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனீஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் இருக்கும் போது சசிபெருமாளுக்கு கள் படையில் இட்ட சம்பவம் சமூக நல ஆர்வலர்களை மட்டுமில்லாமல் சசி பெருமாளுக்காக ஆதரவு கரம் நீட்டியவர்களின் முழு கவனத்தையும் தமிழ்நாடு கள் இயக்கம் நல்லசாமி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment