Tuesday 25 August 2015

கட்சிப் பேனர்களில் கலக்கும் கலெக்டர்கள் – தமிழக முதல்வரின் முகம் மாறுமா ?

தமிழக அளவில் அ.தி.மு.க கட்சி கட் அவுட்டர்களில் அ.தி.மு.க கலர் அடித்த பேனர் வைக்க கற்றுக் கொடுத்ததே கரூரின் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷோபனா தான் – அவர்கள் வழியில் தொடரும் மற்ற மாவட்ட ஆட்சியர்கள் – ஷோபனா ஐ.ஏ.எஸ் பதவி உயர்வை தொடர்ந்து எங்களுக்கும் பதவி உயர்வு வருமா ? என ஏக்கத்தில் அடித்தனரா பேனரை ? குழப்பத்தில் மக்கள்
தமிழகத்தில் தற்போது ஆளுகின்ற அ.தி.மு.க அரசு பொறுப்பேற்று பல சாதனைகள் புரிந்து வந்தாலும் அதில் ஒரு சில தவறுகளை மறைப்பதற்காகவும், மறுப்பதற்காகவும் தமிழக முதல்வரின் மனதில் பட்ட வண்ணம் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முழு முதற்காரணமே கரூரின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஷோபனா தான்




கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியராக செயல்பட்ட ஷோபனா, தான் ஒரு  அரசு அதிகாரி போல இல்லாமல் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக செயல்பட்டார் ஏனென்றால் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் பிடிக்கும் வகையில் அத்தனையும் கலக்கி போடாத சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு, சாக்கடைக்கு நிதி ஒதுக்கீடு என பல்வேறு குற்றசாட்டுகளில் அவர் பெயர் அடிபட்டு வந்தது. இதையொட்டி முன்னதாக கடந்த 2012 ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ அரசு அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஷோபனாவும் ஒருவர். தமிழகத்தில் உள்ள 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிமாற்றம் செய்து தமிழக அரசு 2012 ம் வருடம் அதிரடி உத்தரவிட்டது. முன்னாள் கரூர் கலெக்டராக ஷோபனா இருந்து வந்தார். கடந்த 2012 ம் ஆண்டு அவரை மாற்றியுள்ளனர். ஆனால் அவருக்குப் அப்போது புதிய பொறுப்பு தரப்படவில்லை, காத்திருப்போர் பட்டியலிலும் அவரை வைக்கவில்லை. மாறாக தொங்கலில் விட்டுள்ளனர். ஷோபனா மாற்றம் குறித்து அதிகார வட்டத்தில் விசாரித்தபோது சிலர் கூறுகையில், தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றபோது அதை பாராட்டி கரூரில் டிஜிட்டல் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதாக கலெக்டர் ஷோபனா பெயர் அடிபட்டது. ஆனால் இதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அரசு அதிகாரிகளாக செயல்படக் கூடியவர்கள் அரசியல் சார்பு இன்றி செயல்பட வேண்டும். மக்கள் சேவை செய்பவர்களுக்கு அரசியல் எதற்கு. இவர்கள் எதையோ எதிர்பார்த்து தான் இப்படி செய்துள்ளார்கள் என்று பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக திமுக ஷோபனாவின் பேனர் விவகாரத்தை கடுமையாக விமர்சித்தது. அரசியல்வாதிகளையே ஷோபனா மிஞ்சிவிட்டார் என திமுக விமர்சித்தது. இந்த நிலையில்தான் ஷோபனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஆளும் கட்சி செல்வாக்குள்ளதால் அவர் மீண்டும் ஏதாவது தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளிலோ இடம் பெறுவார் என்று அடித்துக் கூறினர். இந்நிலையில்  டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுபாட்டு அதிகாரியாக கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெ.ஷோபனா ..எஸ். நியமிக்கப்பட்டார். இவர் சென்னையை சேர்ந்தவர். 2003-இல் ..எஸ் பணியில் சேர்ந்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்தபோது அரசியல்வாதி போல செயல்பட்டு வந்ததாக பத்திரிக்கைகளால் விமர்சிக்கப்பட்டவர் என்ற ஒரு காரணத்தினால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கப்பட்டது என்கின்றனர். இதே போல நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணா மூர்த்தி ஜெ மீண்டும் முதல்வராக்க நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்டு கட் அவுட்டர்களில் பெயர் பொறித்து பின்பு இராஜ மரியாதையுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்பு இதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்தின் விளம்பரமும் கட்சி பேனரில் வைக்கப்பட்டுள்ளது தான், தற்போது மற்ற மாவட்ட ஆட்சியர்களிடம் சந்தேகத்தை கிளப்புகிறது. தற்போது கட்சி கட் அவுட்களில் பெயரை வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெ ஷேட் அப் என எப்போது சொல்வார்கள் என்றும் முன்னாள் மாவட்ட கரூர் ஆட்சியர் ஷோபனா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரூர் பகுதி மக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment