Sunday 30 August 2015

ராஜஸ்தான் - உத்திரகாண்ட் பேருந்து விபத்துகள் 13 பேர் பலி 53 பேர் படுகாயம் - சோகம்


ராஜஸ்தானில் ஓடும் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் இச்சம்பவத்தில் 26 பேர் படுகாயம் உடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளன

பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 5 பேர் பலி - 26 பேர் படுகாயம்
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் இருந்து ஒரு மினி பேருந்து புறப்பட்டது. சிவபுரி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ரிஷிகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி மோதி விபத்து: 8 பேர் பலி 27 பேர் காயம்

ராஜஸ்தானில் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலியானார்கள்.  27 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானின் சர்தார்சாஹர் பகுதியில் இருந்து பிகாநேர் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  ஸ்ரீதுங்கர்கார்ஹ் பகுதியில் தொளியாசர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.  27 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் 16 பேர் ஸ்ரீதுங்கர்கார்ஹ் பகுதியில் உள்ள மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த 11 பேர் பி.பி.எம். அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  உயர்க் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். இந்த இரு வேறு விபத்துகள் குறித்து இரு மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு கோர சம்பவங்கள் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





No comments:

Post a Comment