Saturday, 29 August 2015

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் சொந்த விருப்பங்களை திணிப்பதா? பா.ம.க ராமதாஸ் கண்டனம்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016- ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கருத்துக்கணிப்பில் பா.ம.க. முதல்-அமைச்சர் பதவிக்கான வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3 ஆயிரத்து 500 பேரிடம் மட்டுமே, அதாவது, ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை, அதில் 10 ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.

எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment