கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் மதுவிலக்கு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 100 கேன்களில் இருந்த எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் அதிரடி சோதனையில் தொடர்ந்து எரிசாராயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அருகே இரண்டாவது நாளாக மது விலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மீண்டும் 1435 லிட்டர் கொண்ட 41 எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் எரிசாராயம் பதுக்கிவைத்திருப்பதாக வாணியம்பாடி கலால் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று அப்பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுட்ட போது லாலா ஏரி பகுதியில் உள்ள பூட்டப்பட்ட ஒரு சின்னத்தம்பி கலைவாணி வீட்டில் எரிசாராயம் பதுக்கிவைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 35 லிட்டர் அளவு கொண்ட 75 கேன்கள் என மொத்தம் 2625 லிட்டர் எரிசாராயத்தை கலால் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் சின்னத்தம்பி கலைவாணி இருவரையும் கைது செய்தனர்.மேலும் இரண்டாவது நாளாக மது விலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மீண்டும் அதே பகுதியில் உள்ள காமராஜபுறம் என்ற இடத்தில மீண்டும் 1435 லிட்டர் கொண்ட 41 எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்து மோகன்ராஜ் தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் மேலும் எங்கேயாவது, எரிசாராயம் பதுக்கிவைக்கபடுள்ளதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக அதே பகுதியில் எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரபினை ஏற்படுத்தியுள்ளது
.
No comments:
Post a Comment