Thursday 27 August 2015

கரூர் மாவட்டத்தில் தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள மின் மேம்பாட்டு பணிகள் தொடர்பான விவர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



கரூர்
மாவட்டத்தில் தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட
உள்ள மின் மேம்பாட்டு பணிகள் தொடர்பான விவர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாவட்ட மின்சார குழு கூட்டம் தீன்தயாள் உபாத்யாய
கிராம ஜோதி யோஜ்னா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம் பணிகள் தொடர்பான
விவர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்
ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , கிருஷ்ணராயபுரம்
சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் , மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தின் மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களில்
உள்ள கிராமங்களில்  மின் கட்டமைப்பு வசதிகள்
அந்தந்த மாநில மின்துறையின் வாயிலாக மேம்படுத்துவத்கே முக்கிய நோக்கமாகும் மேலும் கரூர்
மாவட்டத்தில் கரூர் , க.பரமத்தி, கடவூர் போன்றகிராமங்களில் சீரான மின் அழுத்தம் பெறுவதற்க்கு
புதிய 33/11 கிலோ வாட் உள்ள புதிய துணை மின் நிலையம் அமைத்தல். கரூர் மாவட்டத்தில்
கரூர் , குளித்தலை  உள்ளிட்ட 8 வட்டாரத்தில்
27526 மின் இணைப்பில் உள்ள பழைய மின் அளவியினை மாற்றி புதிய மின் அளவிகள் பொறுத்தப்பட
உள்ளன. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தற்போது உள்ள
தாழ்வலுத்த மின் பாதைகளின் கம்பிகளை மாற்றி பலப்படுத்த 24 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு
புதிய மின் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment