Saturday, 22 August 2015

சன் டி.வி போய் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கொண்டு வந்தது புதிய பிரச்சினை - மத்திய அரசு - டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக கலாநிதி மாறனுக்கு மீண்டும் சம்மன்

ஏற்கனவே சன் டி.வி பிரச்சினை வலுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்ற உத்திரவையடுத்து அந்த பிரச்சினை ஒரு புறம் இருக்க, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சன் டி.வி யின் கலாநிதிம் மாறனின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பிரச்சினை நீடித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 ஆகிய நிதியாண்டுகளில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித் தொகையான ரூ. 36.5 கோடியை, வருமான வரித்துறைக்கு முறைப்படி செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது.
இதனால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மேலாண் இயக்குநர் எஸ்.நடராஜன் ஆகியோர் மீது டெல்லி பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், நடராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால், அவர்கள் இருவரும், செப்டம்பர் 21ஆம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும்  சம்மன் அனுப்ப நீதிபதி பிரீதம் சிங் உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment