Sunday, 23 August 2015

கரூரில் 16 ஆம் நூற்றாண்டை சார்ந்த குளம் சிவனடியார்களே தூர்வாரும் காட்சி - பேட்டி சிவ.சரவணக்குமார்



கரூரில் 16 ம்
நூற்றாண்டைச் சார்ந்த அதிசய குளத்தை தூர்வாரிய சிவனடியார்கள் – கடவுள் தனது படைப்புத்
தொழிலான கருவூருக்கு மீண்டும் பெருமை சேர்த்த புண்ணிய குளம்
பண்டைய காலம் முதல்
இக்காலம் வரை தமிழ்நாட்டின் மைய பகுதியாக விளங்குவது கரூர் ஆகும், புராதான மிக்க இக்கரூர்
நகர் கரூ உருவாகின்ற ஊர் என்பதாலும், சித்தர் கரூவூரார் ஜீவ சமாதி அடைந்ததாலும் கருவூர்
தான் என்று பெயர் பெற்றிருந்தது. அப்படிப் பட்ட இந்த கரூர் நகரில் பிரம்மன் தனது படைப்புத்
தொழிலான கரு உருவாகின்ற வகையில் பிரம்ம தீர்த்தம் குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு
அங்கிருக்கும், வஞ்சுலீஸ்வரர், கரூவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் வந்து கடவுளை
கும்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது வரலாறு அப்புகழ் பெற்ற பிரம்ம தீர்த்த
குளம் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் அனைத்து சிவனடியார்கள்  கூட்டமைப்பு, திருத்தொண்டர் சபை ஆகியோர் இணைந்து
இந்த குளத்தை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டதோடு அக்குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுப்பட்டு
வருகின்றனர். கரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெறும் இந்த உழவாரப்பணியில்
கரூர் மட்டுமில்லாமல் தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் கலந்து
கொண்டு தங்கள் குடும்பத்துடன் குளத்தை தூர்வாரும் உழவாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கான முழு ஏற்பாடுகளை அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு, திருத்தொண்டர் சபையினர்
செய்து வருவதாக அவர்கள் கூறினர். மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில்
உள்ள இந்த குளத்தை சிவனடியார்களும், பொதுமக்கள் மற்றும் திருதொண்டர்கள் மட்டுமே தூர்வாரி
வருவதால் இதனை சீரமைக்கும் பணியை நாங்கள் செய்து முடித்து விட்டாலும் புதுப்பிக்கும்
பணியை அரசு தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : சிவ.சரவணக்குமார்
– செயலாளர் – அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு



No comments:

Post a Comment