தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டய பயிற்சி கல்லூரிகளில் மாணவ – மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 31–ந்தேதி தொடங்கி 1 மற்றும் 2–ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல் நோக்கு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இந்த கலந்தாய்வில் 2000 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதில் கலந்து கொள்வதற்கு மாணவ–மாணவிகளுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் பெறாதவர்கள் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுவரை நர்சிங் பட்டய படிப்பு 3½ ஆண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ கல்வி தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் உஷா கூறியதாவது:–
தமிழகத்தில் 23 அரசு பட்டய நர்சிங் கல்லூரியில் உள்ள 2000 இடங்களுக்கு 31–ந்தேதி முதல் 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும். காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் செயலாளர், தேர்வுக்குழு, என்ற பெயரில் ரூ.200–க்கு காசோலை எடுத்து சமர்பிக்க வேண்டும்.
தினமும் கலந்தாய்விற்கு 600 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர். கடைசி நாள் இந்த எண்ணிக்கை சற்று கூடுதலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நர்சு பட்டய படிப்பில் சேரும் மாணவ – மாணவிகளுக்கு அரசின் கல்வி கட்டணம் ரூ.1200 மட்டுமே. படிப்பு காலத்தில் மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகையும் கிடைக்கும்.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 1–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்குகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு மருத்துவ கல்லூரிகளும் அன்று திறக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment