Friday 28 August 2015

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க வுடன் கூட்டணி இல்லை - கரூர் அருகே விஜயகாந்த் திட்ட வட்டம்



வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க வுடன் கூட்டணி இல்லை - கரூர் அருகே விஜயகாந்த் திட்ட வட்டம்
சசிபெருமாள்
இறப்பில் மர்மம் உள்ளதாகவும்.   அந்த மர்மம்
குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கரூரில் தேமுதிக சார்பில்
இன்று நடைபெற்ற மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசினார்.
          தேமுதிக சார்பில் அதன் நிறுவனர், தலைவர்
விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி,   கரூர் மாவட்டம்
தரகம்பட்டியில் சுமைபணி தொழிலாளர்களுக்கு தட்டு, ரிக்சா உள்ளிட்ட பொருள்களை வழங்கும்
நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
          நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டு
சுமை பணி தொழிலாளர்களுக்கு ரிக்சா உள்ளிட்ட பொருள்களை வழங்கி பேசுகையில்,   சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதாக கூறும் ஜெயலலிதா
எல்லா ஜாதி ஓட்டுகளை பெற முயற்சிக்கிறார்.    அடுத்தது ஜெயலலிதா ஆட்சியை வரவிடமாட்டேன், பால்,  போக்குவரத்து,
கரண்ட் எல்லாவற்றின் விலையையும் ஏற்றி விட்டார்கள்.  மக்களுக்குத் துரோகம் செய்தவர்களை விட மாட்டேன்.
          அடுத்து 6 மாதத்தில் தேர்தல் வரும்,  அதிமுகவுக்கு டெபாசிட் போகும். விஜயகாந்துக்கு சினிமாவில்
மட்டுமே நடிக்கத் தெரியும்,  நேரில் நடிக்கத்
தெரியாது.  என் மீது வழக்குகள் போட்டால் பயப்
படமாட்டேன். பயப்படுகிறவர்கள் யாரும் என் கூட இல்லை. சசிபெருமாள் சாவில் மர்மம் உள்ளது.
இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும். சிபிஐ விசாரணையை வர வைப்பேன் இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த்
பேசுகையில்,    தேமுதிகாவை 10  ஆண்டு கட்சி என்கிறார்கள் 30 ஆண்டு காலம் ரசிகர்
மன்றமாக இருந்து கட்சியாக உருவெடுத்தது.
50 ஆண்டு காலம் திமுகவும்,  அதிமுகவும்
மாறிமாறி ஆட்சி செய்துள்ளனர்.  ஆனால், எந்த
வளர்ச்சியும் இல்லாததற்கு இவர்கள் தான் காரணம். அடுத்த தேர்தலை மட்டுமே குறிக்கோளாக
கொண்டு இருப்பவர்கள் திமுகவும்,  அதிகமுகவும்.  ஆனால், வருங்காலம் தமிழகத்தை மட்டுமே சிந்திப்பவராக
விஜயகாந்த் உள்ளார் என பேசினார்.



No comments:

Post a Comment