Monday 31 August 2015

கரூர் அருகே தனியார் குளிர்பான நிறுவனம் அமைய எதிர்ப்பு ! விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !



கரூர் அருகே குளிர்பான
நிறுவனம் அமைய எதிர்ப்பு ! விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
! குளிர்பான நிறுவனம் அமையும் பட்சத்தில் சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம், கடையடைப்பு
உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த முடிவு
கரூர் மாவட்டம்,
குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியை அடுத்த புழுதேரி கிராமத்தில் தனியார் குளிர்பான
நிறுவனம் அமைய உள்ளதாகவும், இதற்காக இடம் தேர்வு மற்றும் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக
கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் மனு கொடுத்தனர்.
மேலும் ஏற்கனவே ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்து தங்களது குடிநீர் பற்றாக்குறையை
இது வரை போக்க வில்லை. தற்போது இங்கு அமைய உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தால் பெரும்
நெருக்கடியை இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சந்திக்க உள்ளனர் என குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த நிறுவனம் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்து ராட்சித இயந்திரங்களை
வைத்து நீர் உறிஞ்ச திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம்
மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி உடனே நடவடிக்கை எடுப்பதாக
கூறினர். மேலும் மனு கொடுத்து வெளியே வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆலை அமைக்க விடமாட்டோம்
என நம்புகிறோம், அப்படி ஆலை அமையபெற்றால் அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம்,
சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.

பேட்டி : பிரகாஷ்
கண்ணா – அப்பகுதி பொதுமக்கள் - புழுதேரி

No comments:

Post a Comment