Friday 28 August 2015

கரூரில் தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் ஊராட்சி, பேரூராட்சி , நகராட்சி பகுதிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் ரூ.50.52 கோடி மதிப்பீட்டில் மின் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன மின்சாரக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை தகவல்!!!

கரூர்  மாவட்ட  ஆட்சியர்  அலுவலக  கூட்ட  அரங்கில்  தமிழ்நாடு  மின் உற்பத்தி  மற்றும்  பகிர்மான  கழகத்தின்  மாவட்ட  மின்சாரக்  குழு  கூட்டம்   மாவட்ட  ஆட்சித் தலைவர்  ஜெயந்தி  தலைமையில்  நடைப் பெற்றதுஇக்கூட்டத்தில் பாராளுமன்ற  துணை  சபாநாயகர்  டாக்டர்.மு.தம்பிதுரை  கலந்து  கொண்டு  தீன்  தயாள்  உபாத்யாய  கிராம  ஜோதி   யோஜ்னா  திட்டத்தின்  கீழ்   மேற் கொள்ளப்பட  உள்ள  பணிகள்  தொடர்பாக  திட்டங்கள்  குறித்து  ஆய்வு  மேற்கொண்டு  தெரிவிக்கையில்  
                தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா  பொதுமக்களுக்கு  எவ்வித  இடையூறு  வராத  வண்ணம்  பல்வேறு  திட்டப் பணிகளை அறிவித்து  தங்கு  தடையின்றி  மின்சாரம்  வழங்கப்பட்டு  வருகின்றனசில  இடங்களில்   பழுதடைந்த  மின்  கம்பங்கள்  மற்றும்  மின்மாற்றிகள்  பழுது  நீக்கும்  பணிகள்  மேற்கொள்ளும் பொழுது  மின்சாரம்  நிறுத்தி  வழங்கப்படும்  சூழ்நிலையை  எதிர்கட்சியைச்  சேர்ந்த  பிரமுகர்கள்  மின்சாரம்  தடைபடுவதாக  தேவையற்ற  பிரச்சாரங்களைச்  செய்து  வருகின்றனர்தமிழக  முதலமைச்சர்  அம்மா  பதவி ஏற்ற  நாள்  முதல்  மின்சாரத்திற்காகவே  தனி  கவனம்   எடுத்து  தேவையான  பணிகளை  உடனுக்குடன்  நிறைவேற்றி  செயல்படுத்தப்பட்டு  வருகின்றது.  அதுமட்டுமின்றி  மத்திய  அரசு  வழங்கும்  திட்டங்களையும்   முதலமைச்சர் ஜெயலலிதா  ஆணைப்படி  உடனுக்குடன்  கேட்டு  திட்டங்கள்  நிறை வேற்றப்பட்டு  வருகின்றன.  அதனைத்  தொடர்ந்து  தற்பொழுது  கரூர்  மாவட்டத்திற்கு  மத்திய  அரசு  திட்டமான  தீன்  தயாள்  உபாத்யாய  கிராம  ஜோதி   யோஜ்னா  திட்டத்தின்  கீழ்   ரூ.17.64  கோடி  மதிப்பீட்டில்   கிராம  ஊராட்சி  பகுதிகளுக்கு   மின்  கட்டமைப்பு  வசதிகளை  மேற்கொள்ள    திட்டங்கள்  துவங்கப்பட  உள்ளன.
                 மேலும்  குப்புச்சிபாளையம்,  கொசூர்,  ரெங்கநாதபுரம்  ஆகிய  இடங்களில் புதிய  33/11  கி.வோ  துணை  மின் நிலையங்கள்  மற்றும்  அதற்கு  உரிய   33 கி.வோ  மின்பாதைகள்  மற்றும்  11  கி.வோ  மின்பாதைகள்  அமைக்கப்பட  உள்ளது.  மேலும்  மேற்படி  துணை  மின் நிலையங்களில்  புதிய  11  கி.வோ  மின்னேற்பு  கலங்கள்  அமைக்கப்பட  உள்ளது.  இதனால்  மேற்படி  கிராமங்களில்  சீரான  மின்னழுத்தம்   கிடைக்கும்.  அதனைத்  தொடர்ந்து  தற்போது  இயக்கத்தில்  உள்ள  பாலவிடுதி  மற்றும்  நச்சலூர்  33/11 கி.வோ  துணை  மின் நிலையங்களில்  கூடுதலாக  8  எம். திறன்  கொண்ட  மின் மாற்றிகள்  அமைக்கப் பட உள்ளது.  மற்றும்  எட்டு  வட்டாரங்களில்  உள்ள  27526  மின் இணைப்பில்  உள்ள  பழைய  மின்  அளவியினை  மாற்றி  புதிய  மின் அளவிகள்  பொருத்தப் பட  உள்ளன.                                                               

மேலும்  மத்திய  அரசு  திட்டமான  ஒருங்கிணைக்கப்பட்ட  மின்  மேம்பாட்டுத் திட்டத்தின்   கீழ்  ரூ.32.88 கோடி  மதிப்பீட்டில்   குளித்தலை  நகராட்சி  மற்றும்  பதினொன்று  பேரூராட்சிகளில்  மின்  கட்டமைப்பு  வசதிகளை  மேற்கொள்ள    திட்டங்கள்  துவங்கப்பட  உள்ளனஅதனைத்  தொடர்ந்து  குளித்தலைஅரவக்குறிச்சி  மற்றும்  உப்பிடமங்கலம்  ஆகிய  இடங்களில்  புதிய 33/11 கி.வோ  துணை  மின் நிலையங்கள்  மற்றும்  அதற்கு  உரிய   33கி.வோ  மின் பாதைகள்  மற்றும்  11 கி.வோ  மின் பாதைகள்  அமைக்கப்பட  உள்ளதுமேலும்  மேற்படி  துணை  மின்நிலையங்களில்  புதிய  11 கி.வோ  மின்னேற்பு  கலங்கள்  அமைக்கப்பட  உள்ளது.  இதனால்  மேற்படி  கிராமங்களில்  சீரான  மின்னழுத்தம்   கிடைக்கும்இதன்  மூலம்   குளித்தலை  நகராட்சி  மற்றும்  பதினொன்று  பேரூராட்சிகளில்   உள்ள  55743  மின் இணைப்பில்  உள்ள  பழைய  மின்  அளவினை  மாற்றி  புதிய  மின்  அளவிகள்  பொருத்தப்பட  உள்ளன.
                மேலும்  புதிதாக  328  மின்மாற்றிகள்  அமைக்கப்பட  உள்ளனஏற்கனவே  உள்ள  உயரழுத்த  மற்றும்  தாழ்வழுத்த  மின்பாதைகளின்கம்பிகளை  மாற்றி  பலப் படுத்த  புதிய  மின் பாதைகள்  அமைக்கப்பட  உள்ளனமற்றும்  சூரிய  ஒளி  மின்  திட்டம்  30  கி.வோ  அளவில்  மேற்பார்வை  பொறியாளர்/ பகிர்மானம்/ கரூர்  அலுவலக  மேற் கூரையிலும், 10 கி.வோ  அளவில்  செயற்பொறியாளர் /கிராமியம் /கரூர்  அலுவலக  மேற் கூரையிலும்புதியதாக அமைக்கப்பட உள்ள  மூன்று  துணை  மின்  நிலையங்களில் தலா  5 கி.வோ  அளவில் (குளித்தலை, அரவக்குறிச்சி, உப்பிடமங்கலம்அமைக்கப்பட  உள்ளன  என தெரிவித்தார்.
                பின்னர்  தெரிவிக்கையில்  கிராமப் பகுதிகள்  மற்றும்  பேரூராட்சி  பகுதிகள்நகராட்சிப்  பகுதிகளிலும்   பழுதடைந்த  மின் கம்பங்களை  உடனுக்குடன்  மாற்ற வேண்டும்தாழ்வாக  செல்லும்  மின்கம்பிகளை  அவ்வப்போது  கண்காணிப்பு  மேற்கொண்டு  உடனடியாக  சரி  செய்ய  வேண்டும்அதே  போல்  பழுதடைந்த  மின்மாற்றிகள்  செயல்படுவதாக  தெரியவந்தால்  அவற்றையும்  சரி செய்து  தங்கு  தடையின்றி  மின்சாரம்  பெற்று  பயன் பெறும் வகையில் செயல்பட வேண்டும்  என   பாராளு மன்ற  துணை  சபா நாயகர்  மு.தம்பிதுரை    தெரிவித்தார்.

                இந்நிகழ்ச்சியில்  கிருஷ்ணராயபுரம்  சட்டமன்ற  உறுப்பினர் செ.காமராஜ்மாவட்ட  வருவாய்  அலுவலர் மு.அருணா, தமிழ்நாடு  மின் பகிர்மான  கழகத்தின்மேற்பார்வை  பொறியாளர்,  பால சுப்பிரமணியன்செயற் பொறியாளர்கள் சிவக்குமார்ஜெயசிங் பாஸ்கரன்தங்கவேல்பழனிசாமிஉதவி  செயற் பொறியாளர்கள்   சரவணப் பெருமாள்,  நாசர் உசேன், கணேஷ்   மற்றும்  அரசு   அலுவலர்கள்  உட்பட  பலரும்  கலந்து  கொண்டனர்.

No comments:

Post a Comment