Monday 24 August 2015

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா நாளை புதுச்சேரி வருகிறார்



பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா நாளை புதுச்சேரி வர உள்ளார். பின்பு அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் வருகை தர உள்ளதால் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மாலை விமானம் மூலம் சென்னை வரும் அவரைத் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர்.
நாளை காலை கார் மூலம் அவர் சிதம்பரம் சென்று, சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் புதுச்சேரி செல்ல உள்ளார். அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கும் அவர், செயல் வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்ற உள்ளார். மாலையில் அவர் மணக்குள விநாயகர் கோயில் மற்றும் அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment