Wednesday 26 August 2015

மயில் மோதி ரயில் விபத்து கரூர் அருகே பரபரப்பு ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே வந்து கொண்டிருந்த ஜனசதாப்தி விரைவு ரயில் இன்சின் கண்ணாடி உடைத்து இரண்டு பயிற்சி ஓட்டுநரை மயில் தாக்கியதில் காயமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதி..

தினமும் கோவையிலிருந்து  மயிலாடுதுறைக்கு  ஜனசதாப்தி  அதிவேக விரைவு  ரயில் வண்டி  செல்வது  வழக்கம். இதனையடுத்து  இன்று வழக்கம்  வந்து  கொண்டிருந்த போது  ஈரோடு மாவட்டம்  பாசூர்  ரயில்  நிலையத்தை கடந்த  போது  எதிர்பாராத விதமாக  நமது  தேசிய  பறவையான  மயில் திடீரென  பறந்து  வந்து  ரயில்  இன்சின்  முன்பகுதி  கண்ணாடியை  உடைத்து கொண்டு  பயிற்சி  ஓட்டுனர்களான  ரெங்கராஜன், கார்த்திக்  அவர்களை  தாக்கியதில்  இருவருக்கும்  தலையிலும், உடம்பிலும்  கொத்தியதில்  பலத்த  காயம்  ஏற்பட்டது  உடனே  இருவரையும்  கரூர்  அரசு  மருத்துவ மனையில்  மேல்  சிகிச்சைகாக  அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால்  20 கரூரில் நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில் திருச்சிக்கு 40 நிமிடம் தாமதமாக சென்றது.  பறவைகள் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளாகி வரும் நிலையில் தற்போது தேசிய பறவையான மயில் மோதி ரயில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்க சம்பவம் ஆகும்,. மேலும் சாதூர்த்திய ஓட்டும் திறமையால் பணி பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment