Sunday, 23 August 2015

அமர்நாத் யாத்திரை: 37 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டுச் சென்றது

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 37 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது.

59-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், ஹெலிகாப்டர் மூலம் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து பஞ்தர்னியை சென்றடைய 22 ஆயிரத்து 104 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.

கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக இன்றைய குழு புறப்பட்டுச் சென்றது. 27 ஆண்கள், 8 பெண்கள், இரு குழந்தைகள் என 37 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று அதிகாலை பகவதி நகர் மலையடிவார முகாமில் இருந்து ஒரு பேருந்தில் புறப்பட்டு சென்றது.

இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 48,797 யாத்ரீகர்கள் ஜம்மு மலையடிவாரப் பகுதியில் இருந்து குகைக்கோயிலை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment