Monday, 24 August 2015

செப்-2ல் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் : சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் அறிவிப்பு - பீடிக்கு ஆபத்தா ?

செப் 2 ல் நெல்லை மாவட்டத்தில்  5லட்சம் பீடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுள்ளதாக சி.ஐ.டி.யு பீடிதொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பீடி தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் .ராஜாங்கம் தலைமை தாங்கினார்,சங்க மாவட்ட பொதுசெயலாளர் வேல்முருகன் நடைபெற்ற வேலைகள் மற்றும் பணிகள் குறித்து பேசினர். மேலும் இச்சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.வெங்கட்ராமன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து பேசினார். 

கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்-2ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர்கள் கலந்து கொள்வது,மாவட்டம் முழுவதும் இதனால் 5 லட்சம் பீடி தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது ,மத்திய அரசு அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.15ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்,பீடி தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ,கல்வி உதவி தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

தொழிற் சங்க உரிமைகளை தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதர



வாக திருத்தம் செய்வதை கண்டித்தும்,முத்தரப்பு ஒப்பந்தப்படி ஆகஸ்ட் 15 முதல் 1000 பீடிக்கு கூலி உயர்வு ரூ.12சேர்த்து ரூ.177.70ஐ உடனடியாக அனைத்து கம்பெனிகளும் வழங்குவது ,1000 பீடிக்கு தரமான இலை 70கிராம் வழங்க வேண்டும்,போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் தெருமுனை பிரசாரம் செய்வது என்று மாவட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கபட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் முத்துலெட்சுமி, மகாவிஷ்ணு, மாரிசெல்வம், ஆரியமுல்லை, சுடலைமணி, கற்பகவள்ளி, சுப்புலெட்சுமி, தங்கம், ஆறுமுகம், பரமசிவன், பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment