தமிழகத்தின் மையப்
பகுதி மட்டுமில்லாமல், அ.தி.மு.க ஆட்சி ஏற்ற பின் கரூர் நகராட்சி பெரு நகராட்சி ஆனது,
இருப்பினும் கரூர், தாந்தோன்றி, இனாம் கரூர் ஆகிய மூன்று நகராட்சிகளையும், சணப்பிரட்டி
பஞ்சாயத்தையும் சேர்த்து ஓட்டு மொத்த நகராட்சி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
இன்று (31-08-15) மாலை கரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு
செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் செய்தி சேகரிக்க
சென்ற நிருபர்களை வெளியே போக சொன்னார். ஆனால் நிருபர்கள் யாரும் வெளியே செல்லாததால்
அப்போ நான் போறேன் என்கிற நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் கூறுவது போல அவர் வெளி
நடப்பு செய்தார். பின்பு யாரும் வெளியேறியது மாதிரி தெரியவில்லை. இந்நிலையில் சுமார்
10 நிமிடம் கழித்து, 10 நிமிடம் கழித்து வெளியே சென்று உள்ளே வந்து பார்த்தார். 3 முறை
இப்படியே செய்தும் யாரும் வெளியேறாததால் நிருபர்களுக்கு நன்றி, நகர்மன்ற தலைவராகிய
எனக்கு மாரியாதை கொடுத்ததற்காக மிக மிக நன்றி என கூறி கூட்டத்திற்குள் வந்தார். மன்றப்
பொருளை நகராட்சி வருவாய் அலுவலர் கண்ணன் ஒவ்வொரு தீர்மானமாக வாசித்தார். அப்போது கூட்டத்தில்
அ.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டு தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
அப்போது கடந்த பல ஆண்டுகளாக கரூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி இருந்து
வந்துள்ளதாகவும், அதை ஒரு வருடமாக வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மன்ற கூட்டத்தில்
அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சி கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் இது வரை
நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை சுட்டிக்காட்டினார்கள். பல வருடங்களாக
நகராட்சிக்குட்பட்ட கடைகளில் ஏலத்திற்கு விடப்பட்ட வாடகை பாக்கி பணம் சுமார் ரூ 3 கோடியை
வசூலிக்க அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தல் மற்றும் கரூர் நகராட்சி கூட்டத்தில்
ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கவுன்சிலர் ஜெகன்நாதன் தலைமையில் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதால்
கரூர் நகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்பு ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக்கூறிய
கவுன்சிலர்கள் தீர்மானத்தை வாசித்த நகராட்சி வருவாய் அலுவலரை கண்டபடி சாட அவர் இப்படி
பேசினீங்கன நான் வேலையை விட்டு போகிறேன் என்று அழுத படியே கூறினார். மேலும் கரூர் நகராட்சி
வரலாற்றிலேயே சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. கரூர் அ.தி.மு.க நகராட்சி தலைவரின் கட்டுப்பாட்டிலேயே
கூட்டம் இல்லை, அந்த அளவிற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் அலறல், சத்தம் ஓவ்வொரு பிரச்சினையும்
என்கிறார் ம.தி.மு.க கவுன்சிலர் சத்தியமூர்த்தி, மேலும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை
தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறாமல் எதோ, நகராட்சி கூட்டம் நடந்தது போல
மக்களுக்கு காண்பிப்பது போல தான் இந்த கூட்டம் நடந்தது. இன்று நடைபெற்ற கரூர் நகராட்சி
கூட்டம் நகராட்சி கூட்டம் போலவே இல்லை என்றார். முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு ஒரு
கடை கொடுக்க கரூர் நகராட்சி நிர்வாகம் முடிவெடுக்க அந்த கடையை எப்படி கொடுக்கலாம் என
கொடுக்காமல் செய்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் கமலா, பன்னீர் (எ) முத்துச்சாமி ஆகியோருக்கு
கண்டனமும் தெரிவித்தார். கடந்த பல வருடங்களாக என் வார்டு பிரச்சினையை எடுத்துக் கூற
முற்பட்டேன், இன்றும் முற்பட்ட போது வெறொரு பிரச்சினையை கொண்டு வந்து சுமார் 4 மணி
நேரமாக கரூர் நகராட்சி கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்றால் அது மிகையாகாது என்றார். மேலும்
இக்கூட்டத்தை தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமான கவுன்சிலர்கள் கரூர்
நகராட்சி பேருந்து நிலையப்பிரச்சினை, உழவர் சந்தை பிரச்சினை என பாக்கி வசூல் என இந்த
பிரச்சினையை இன்றும் கிளப்பியதால் கரூர் நகராட்சியின் கூட்டத்தில் சில மணி சலசலப்பு
ஏற்பட்டது. பின்பு அ.தி.மு.க அரசில் இந்த போல சம்பவம் இருக்க கூடாது என்றும் மன்ற பார்வையில்
வைத்து வலியுறுத்துமாறும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அப்படி, இப்படி என 94 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. இந்த அமளியால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment