Saturday 22 August 2015

கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியது மேலும் ஓணத்திற்க்காக வரும் 26-ம் தேதி சபரிமலை நடைதிறப்பு… தரிசனத்திற்காக அதிகமாக குவியும் பக்தர்கள்

கேரளாவில் ஓணம் பண்டிகை தற்போது களை கட்டியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்கு நடை ஓண பூஜைகளுக்காக வரும் 26-ம் தேதி மாலை சபரிமலை திறக்கப்படுகிறது. சபரிமலையில் கடந்த ஐந்து நாட்களாக ஆவணி மாத பூஜைகள் நடைபெற்றன. ஆவணி மாதம் கேரளாவில் மலையாள புத்தாண்டு என்பதால் பக்தர்கள் கூட்டம் எல்லா நாட்களிலும் அளவுக்கு அதிகமாக இருந்தது.
தினசரி பூஜைகள் மற்றும் நெய்யபிஷேகத்துடன், களபாபிஷேகம், சகஸ்ரகலசம், படிபூஜை போன்ற பூஜைகளும் நடைபெற்றன. இந்த பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு பத்து மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இனி திருவோண பூஜைகளுக்காக வரும் 26-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்படுகிறது.
27 ந் தேதி முதல் நெய்அபிஷேகம் நடைபெறும். 28-ம் தேதி ஓண பூஜைகளும், ஓண விருந்தும் நடைபெறுகிறது. 30-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் மற்றும் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்sabarai photo 01 

No comments:

Post a Comment