தமிழகத்திற்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு பற்றி கொச்சைப்படுத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை அ.தி.மு.க வினரும், பா.ஜ.க வினரும் ஈடுபட்டு வருகின்ற
னர். இந்நிலையில் அ.தி.மு.க வினர் தொடர்ந்து 7 நாட்களாக இது வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
னர். இந்நிலையில் அ.தி.மு.க வினர் தொடர்ந்து 7 நாட்களாக இது வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
காமராஜர் அரங்கத்தின் முன் னாள் பெண் ஊழியர் கொடுத்த புகாரின்பேரில் தமிழக காங் கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொலை பேசி உதவியாளராக இருந்த வளர்மதி (50) என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நான் பணியாற்றியபோது அரங்கம் மற்றும் கடைகளின் வாடகை கணக்கு விவரங்களை கவனித்து வந்தேன். காமராஜர் அரங்கத்தின் மேலாளர் நாராயணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சேர்ந்து வாடகை பணத்தை கட்சிக் கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்வதை கண்டுபிடித்தேன். இதுகுறித்து கேட்டதற்கு, இளங் கோவன் என்னை தரக்குறைவாக பேசினார். அடிக்கவும் முயற் சித்தார். தொடர்ந்து என்னை மிரட்டினார். வேலையில் இருந் தும் நீக்கிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அறிவுறுத் தப்பட்டது. இதையடுத்து, உதவி ஆணையர் சிவபாஸ்கர், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். தாக்க முயற்சித்தல், தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், உட்பட 7 பிரிவுகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்ஜாமீன் கோரி இளங் கோவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment