Sunday, 30 August 2015

தர்மபுரி அருகே மீன்கள் எடை பெருகுவதற்காக மற்ற மாமிசங்களை ஏரியில் கலந்து விடுவதால் விவசாய நிலங்கள் கெட்டுப் போகும் நிலை - அச்சத்தில் விவசாயிகள்



தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கேசர்குளி அணை உள்ளது இதில் அரசு நிர்வாகம் மீன் வளப்பதற்காக தனியார் நபரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது இந்த அணையில் சுத்தமாக இருந்த தண்ணீரில் மீன் எடை அதிகமாக வருவதற்காக சுத்தமான நீரில் அசுத்தமான பொருட்கள் போடப்பட்டுள்ளது கோழி,மாடு,பன்றி,நாய் ,கிழங்கு ஆகிய மோசமான கழிவுகளை தண்ணீரில் கரைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசப்படுகிறது இதில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தண்ணீர் குடிக்கமுடியாமல் தவித்து வருகின்றன இந்த அணையில் உள்ள நீர் சேரு கலராக மாறி உள்ளது அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் குடிநீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் இந்த கழிவுகள் தண்ணீரில் கலந்துள்ளதால் பூமியில் நீர் ஊரும் போது அனைத்து விவசாய மக்கள் கிணற்றில் பாய்கின்றன இந்த தண்ணீரை குடித்தால் தொற்று நோய் பரவுவதாக விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர் இந்த கழிவுநீரை அணையில் போடாமல் இருப்பதற்கு தமிழக அரசு தர்மபுரி மாவட்டம் மாசு கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமறு அப்பகுதி விவசாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்





No comments:

Post a Comment