தமிழக சட்டசபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடந்த மது விலக்கு கோரி நடந்து வரும் போராட்டங்கள், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அதிமுகவினரின் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாளை தமிழக சட்டசபை கூடுகிறது. சட்டசபைக் கூட்டத்தில் அமளிக்குப் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் (விஜயகாந்த்தைத் தவிர) அனைவரும் தடை செய்யப்பட்ட நிலையில் நாளை சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் காத்துள்ளன. இதனால் பல வெளிநடப்புகள், அமளிதுமளிகளுக்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையின் கூட்டம் நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. 19 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.முதல் நாளான நாளை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவித்து நாளை சபை ஒத்திவைக்கப்படும். பின்பு மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

2வது நாள் கூட்டம் அடுத்து 25ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் வீட்டு வசதி, வேளாண்மைத்துறை ஆகிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
தேமுதிக மிஸ் இந்தக் கூட்டத்தில் தேமுதிக உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது. விஜயகாந்த் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் அவர் வருவாரா என்று தெரியவில்லை. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் 27 மற்றும் 28 ம் தேதி தே.மு.தி.க தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வருகைதர உள்ளார்.

பிரச்சினைகள் பலவிதம் மது விலக்கு கோரி நடந்து வரும் போராட்டங்களை காவல்துறை ஒடுக்குவது, அதேசமயம், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று தெரிகிறது.
சென்னை குடிநீர்ப் பிரச்சினை சென்னையில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகளை சபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் காத்துள்ளன.
பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே பரபரப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படிப்படியாக பிரச்சினையை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வியூகங்கள் எடுத்து தற்போது இன்று காலை அ.தி.மு.க தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் இளங்கோவன் பிரச்சினை தொடர்பாக போராட்டங்களை தொடர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை சட்டசபை கூட உள்ளது. மேலும் புதிய அமைச்சராக ஆனந்தன் பதவியேற்ற பிறகும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜியை பதவி பறிப்பிற்கு பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment