Tuesday 20 October 2015

திருச்சி அருகே கோரவிபத்து சென்னை- திருச்சி அரசுப் பேருந்து லாரி மீது மோதி 10 பேர் பலி; 13 பேர் படுகாயம்




சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திருச்சி சமயபுரம் அருகே விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திருச்சி சமயபுரம் அருகே நேற்று இரவு 9.45 மணியளவில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் ஒருபுறம் முழுவதுமாக சிதைந்தது. இக்கோர விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 13 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் நடத்துனர் பகுதியிலான இடதுபுறம் முழுவதும் முற்றிலுமாக சிதைந்துள்ளது. இருங்களூரில் இருந்து இரும்பு ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை நடந்து கொண்டிருந்ததாகவும், பின்புற விளக்குகள் இல்லாத காரணத்தினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் இவ்விபத்தில் உடன்குடியை சேர்ந்த கோட்டீஸ்வரி, சென்னையைச் சேர்ந்த அன்னாள் ஆகிய இருவரின் உடல்கள் காவல்துறையினரால் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. 6 ஆண்கள், ஒரு சிறுவன், 2 பெண்களின் உடலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் விவரங்களை கண்டறிய விபத்துக்குள்ளான பேருந்தின் எண் 198U என்பதும் அறிவிக்கப்பட்டது. ரத்த தானம் அளிக்க காயமடைந்த பயணிகளுக்கு ரத்ததானம் செய்ய அரசு மருத்துவக் கல்லூரியை அணுகி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயத்தின் தன்மையை பொறுத்து பயணிகள் சென்னை அல்லது மதுரை மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் 108 ஆம்புலன்ஸின் மேலாளர் பிரபு தெரிவித்துள்ளார். அமைச்சர் நேரில் ஆறுதல் இவ்விபத்தில் காயமடைந்தவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக சட்டமன்ற கொறடா மனோகரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரின் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment