Saturday, 24 October 2015

மாஜி அமைச்சரும், மாஜி மாவட்ட செயலாளரை நீக்கியதையடுத்து புத்துணர்ச்சி பெற்ற அ.தி.மு.க கட்சி - பொதுமக்களின் தேவைகள் என்ன ? என்ன ? வீடு தேடி கேட்டறிந்த மக்களவை துணை சபாநாயகர் – கரூர் அருகே நடைபெற்ற அவரின் குறைதீர்க்கும் நடைபயணம், அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுர விநியோகத்தில் முழு ஈடுபாடு கொண்ட மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை





கரூர் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை, முன்னாள் மாஜி மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சருமான செந்தில் பாலாஜியை நீக்கியதையடுத்து தற்போது கட்சிப்பணி மட்டுமில்லாமல் பொதுமக்களின் குறைதீர்க்கும் பணிகளையும், அரசு கூட்டங்களிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் அவர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே இருப்பதாகவும், அதை ஊடகங்களில் அவரை தவறாக உணரச்செய்தவர் செந்தில் பாலாஜி என்வர் ஒருவரையே சாரும், இந்நிலையில் தற்போது அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமில்லாமல் அமைச்சரவை பொறுப்புகளில் இருந்து முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நீக்கியதையடுத்து தற்போது கரூர் மாவட்ட அரசியல் வரலாற்றிலேயே அ.தி.மு.க கட்சி களை கட்டியுள்ளது. இந்நிலையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை தற்போது புற்றுயிர் பெற்றது போலவும், இளைஞர் போலவும் ஓவ்வொரு செயலலிலும் அக்கறை காட்டியுள்ளார். அதன்படி அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், அரசு கூட்டங்கள், பொதுமக்களின் நலன் காக்கும் சேவைகள் என அடுக்கு அடுக்கான சேவைகளில் எந்த வித விளம்பரமும் இல்லாமல் ஈடுபடுத்தி வருகிறா. இந்நிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட 33, 34 வது வார்டுகளான பசுபதிபாளையம், வடக்குத்தெரு, தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, ஆகிய பகுதிகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு வசிக்கும் மக்களிடையே தேவைகள் என்ன என கேட்டறிந்தார். அப்போது தங்களுக்கு குடிநீர் வருகிறதா ?. சாக்கடை வசதி உள்ளதா, சாலை வசதி. தெருவிளக்கு ஆகியவனவற்றைவகளை கேட்டறிந்தார். பின்பு இந்நிகழ்ச்சியை முடித்த கையோடு அ.தி.மு.க அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அவர் விநியோகித்ததோடு, புதிய மாவட்ட செயலாளரான விஜயபாஸ்கரையும் பொதுமக்களை எப்படி பார்ப்பது, எப்படி அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என கற்றுக் கொடுத்தது போல இந்நிகழ்ச்சி அமைந்தது. இந்த ஆய்வின் போதும், துண்டு பிரசுரங்கள் கொடுக்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும்,  கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் நகர செயலாளரும், நகர்மன்ற குழு உறுப்பினருமான வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த  திடீரென நடத்தப்பட்ட இந்த ஆய்வு கரூர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க கட்சி நிகழ்ச்சியில் திடீரென துண்டு பிரசுரங்கள் கொடுத்த நிகழ்ச்சி கட்சியினரிடையே கூட பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் மூத்த நிர்வாகிகளை இல்லம் தோறும் சந்தித்து வாழ்த்து பெற்று வருவதோடு, கட்சி பணிகளில் தனி ஆர்வம் செலுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எது எப்படியோ கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தி.மு.க கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க வை தனி புத்துணர்ச்சி பெற செய்த அம்மா (ஜெ விற்கு) நன்றி என மற்ற உண்மையான அ.தி.மு.க வினர் கருதுகின்றனர். தமிழக அளவில் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் கரூர் நகரத்திற்கு உட்பட்ட பல இடங்களில் மூலை முடுக்கெல்லாம் சென்று அ.தி.மு.க சுவர் விளம்பரத்திற்கு முன்பதிவு பெற்றுள்ளார். அதாவது அம்மாவின் பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான விளம்பரத்திற்கான யுத்தி என்கின்றனர் மற்ற கட்சியினர்.

No comments:

Post a Comment