Tuesday, 20 October 2015

தூய்மை இந்தியா தூய்மை தமிழகம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் சீராய்வுக்குழு கூட்டத்தில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்க வேண்டும் பாராளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை கரூரில் வேண்டுகோள்!!!




தூய்மை இந்தியா தூய்மை தமிழகம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் சீராய்வுக்குழு கூட்டத்தில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்க வேண்டும் பாராளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மை இந்தியா தூய்மை தமிழகம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் சீராய்வுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாண்புமிகு பாராளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் பணி ஆய்வு மேற்கொண்டு பேசுகையில்.,  
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பொதுசுகாதாரத்தினை மேம்படுத்திட பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அதிலும் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நிதிஒதுக்கீடு வழங்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அதற்கு ஏற்ப தமிழகத்தில் கரூர் நகராட்சியை முன்மாதிரி நகரமாக உருவாக்க அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.  அதில் பொதுமக்களின் பங்கும் அதிகளவில் உள்ளன.  பொதுசுகாதாரத்தை முழுமையாக கடைப்பிடித்தோமேயானால் எல்லோரும் சுகாதாரத்துடன் ஆரோக்கியத்துடன் வாழலாம்.  அதில் குறிப்பாக ஒவ்வொருவரும் கழிப்பறை கட்டிடத்தையே பயன்படுத்த வேண்டும்.  கண்டிப்பாக திறந்தவெளி மலம் கழிக்கும் செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  காரணம் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் நோய்கள் அதன் மூலம் தான் அதிகளவில் பரவுகின்றன.  அதனால் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் தனிநபர் கழிப்பறை கட்டிடத்தை கட்டி அதையே பயன்படுத்த வேண்டும்.  பொதுவாக கிராமப்பகுதிகளில் கழிப்பறை கட்டிடம் பயன்பாடு பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு பயனுள்ள திட்டமாக இருக்கும்.  
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தொலைநோக்குத்திட்டம் 2023 உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதன் முக்கிய நோக்கம் தமிழகம் முழு சுகாதாரம் பெறுவதே ஆகும்.  அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதிகளை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் திட்டமிட்டு பணிகளை செயல்படுத்தி தூய்மை தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்.  அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட பயன்பாடற்ற பொருட்களை கண்ட இடங்களில் விட்டு செல்லாத அளவிற்கு நகராட்சி, பேரூராட்சி மூலம் குப்பைத்தொட்டிகளை நிறுவி அதன்மூலம் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதிலிருந்து இயற்கை உரம் மற்றும் பிளாஸ்டிக் தார்சாலை அமைப்பதற்கான தேவையான இடுப்பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்கின்ற நிலையை உருவாக்குவதன் மூலம் நகர்பகுதியும் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்.  பாரத பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டு தமிழக அரசின் ஒருங்கிணைப்புடன் ஓராண்டு காலம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இத்திட்டத்தின் மூலம் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.4000 மும் மாநில அரசு ரூ.2000 மும் நகராட்சி நிர்வாகம் ரூ.2000மும் பயனாளிகளின் பங்குதொகை ரூ.4000மும் ஆக மொத்தம் ரூ.12000 -ம் வழங்கப்படுகிறது.  அதேபோல் சமுதாய கழிப்பிடம் கட்டுவதற்கு மத்திய அரசு மானியம் ரூ.26 ஆயிரமும், மாநில அரசு மானியம் ரூ.8667 மும் மற்றும் நகராட்சி பங்குதொகை ரூ.30,333 மும் ஆக மொத்தம் ரூ.65,000 மதிப்பீட்டில் கட்டிடம்(Pநசளுநயவ)கட்டப்பட்டு வருகின்றன.  இதைபோல் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ரூ.787.33லட்சம் மதிப்பீட்டில் நடப்பாண்டிற்கு திடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இவ்வாறு பொதுசுகாதாரத்தை கடைப்பிடிக்கும் விதத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகள் அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள்ää ஓவியம் மற்றும் வினா-விடை போட்டிகள் நடத்தி போதிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தூய்மை இந்தியா தூய்மை தமிழகம் திட்டத்தினை முழு அளவில் செயல்படுத்துவதுடன் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில் ஒவ்வொருவருக்கும் கடமையுணர்வோடு செயல்பட்டு தமிழகத்தை திறந்தவெளி கழிப்பிட பயன்பாடற்ற மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என பாராளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை  தெரிவித்தார்.
தொடர்ந்து கரூர் நகராட்சிப்பகுதியில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட 357 பயனாளிகளுக்கு புதிய கழிப்பறை கட்டுவதற்கான மத்தியääமாநில அரசின் பங்களிப்புத்தொகைக்கான ஆணையினை மாண்புமிகு பாராளுமன்ற துணைசபாநாயகர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் செ.காமராஜ்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ரமேஷ் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இராஜேந்திரன், மாவட்ட கழக செயலாளர் மற்றும் தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினர்  விஜயபாஸ்கர், கரூர் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல மருத்துவர் மரு.ஹேமசந்காந்தி, நகராட்சி துணைத் தலைவர் காளியப்பன், பேரூராட்சி தலைவர்கள் மணிகண்டன், கமலகண்ணன், சையது இப்ராஹீம், லலிதாவிவேகானந்தன்,  நகர்மன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், விசாகன், ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment