அம்மாடியோவ் ! அதிமுக அரசின் ரூ50,000கோடி ஊழல் புத்தகம் – வரும் 28 ம் தேதி மக்கள் செய்தி மையம் வெளியிடு…
தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களையும், மணல் மாபியாக்களையும், அ.தி.மு.க அரசிற்கே விரோதமாக செயல்படும் அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளின் முகத்திரையை மக்கள் செய்தி மையம் வெளியிட்டு வருகிறது. மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் அவர்களின் வெளியீட்டில் அத்தனையும் தகவல் உரிமை அரியு சட்டத்தின் கீழ் ஆதாரபூர்வமாக வெளி வர உள்ள இந்த இதழில் அ.தி.மு.க அரசின் ரூ 50 ஆயிரம் கோடி ஊழல்கள் அடங்கியுள்ளன. அதிமுக அரசின் ஊழல் புத்தகம் – மக்கள்செய்திமையம் வரும் 28 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுகட்சிகளை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளான முக்கிய கட்சிகள் இந்த புத்தகத்தை வெளியிட மறுத்துள்ளது. தேர்தல் வரும் வேளையில் கூட்டணிக்கான ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கலாம் அல்லவா ? எது எப்படியோ அரசின் பணத்தை ஏப்பம் விடும் அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளின் சொத்துக்கள் முடக்க வேண்டுமென மற்ற சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான பணிகளை மக்கள் செய்தி மையம் குழுவினர் தற்போதே களமிறங்கியுள்ளனர். இந்த புத்தக வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக இருக்க வேண்டுமென்பதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஓட்டியதோடு, நோட்டீஸ், புத்தக மாடல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment