சட்டசபை தேர்தல்
2016 வருவதையடுத்து ஆங்காங்கே அரசியல் கட்சியினர் சுறுசுறுப்படைந்ததோடு, 2016 கல்வி ஆண்டில்
பள்ளி கல்வித்துறை பயிலும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி
தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணிபுரிந்து வரும்
நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளியில்
2014- 15 கல்வியாண்டில் பயின்ற மற்றும் 2015-16 கல்வியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர்
தம்பித்துரை பெரியகுளத்துப்பாளையம், மண்மங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 10
பள்ளிகளில் 1522 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார். அப்போது நெரூர்
அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் பேசிய மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பித்துரை சென்ற ஆண்டு
இந்த பள்ளியில் 162 மாணவ, மாணவிகளும், இந்த ஆண்டு 143 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.சென்ற
ஆண்டை விட இந்த ஆண்டு சேர்க்கை விகிதம் குறைவு தான் என்றார். மேலும் இப்பள்ளியின் தேர்ச்சி
விழுக்காடு மிகவும் குறைந்துள்ளது. அரசே கட்டிடம் கட்டித்தருகிறது. எல்லாவற்றையும்
தருகிறது. தலைமை ஆசிரியரை கேட்டேன் என்றார். எந்த கல்வியாகினாலும் ஆசிரியர் கையில்
தான் உள்ளது, ஏனென்றால் நானும் ஒரு ஆசிரியர் தான், இந்த பள்ளியை ரிசல்ட் கொடுக்க வில்லை
இல்லையென்றால் இந்த பள்ளி இருப்பதில் ஒரு பிரயோஜனம்
இல்லை. மாநில அளவில் 2016 ல் மூன்று பேர் தான் என்றாலும், 12 பேர் தான் படிக்கிறார்கள்
என்றால் கேட்கவே சங்கடமாக உள்ளது என ஆசிரியர்கள் மீது கோபத்தை தாக்கினார். இந்நிலையில்
ஏன் கல்வித்தரம் குறைந்துள்ளது. இந்த ஒரு பள்ளியே இப்படி என்றால் தமிழகம் எப்படி இருக்கும்
என வேதனையுடன் தெரிவித்தார். அதாவது சட்டசபை தேர்தல் வருவது ஒரு புறம் இருக்கட்டும்,
அந்த சட்டசபை தேர்தலிலும் ஆசிரியர்கள் தான் வாக்குசாவடிகளில் ஈடுபடுவார்கள் என ஆசிரியரான
தம்பித்துரைக்கு தெரியவில்லை. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்கு பதில்
ஊரே ஒன்று கூடி மானா மரியாதை கெடுத்த இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்களிடையே
மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆங்காங்கே பயிலும் குழந்தைகளை வெகு நேரமாகியும் காக்க வைத்தது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment