- சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் ஐயப்ப பக்தர்கள், தங்களது ஆடைகளை பம்பை ஆற்றில் வீசி எறிந்து அற்றை மாசுபடுத்த வேண்டாம் என்றும், மீறினால் அபராதத்துடன், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பம்பை நதியில் குளிக்கும் பக்தர்கள் தங்களது ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லும் நடைமுறையைத் தடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற மத நம்பிக்கையில் எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், எந்த ஒரு தனி நபரும், மத நம்பிக்கை என்ற பெயரில், ஆற்றை மாசுபடுத்தக் கூடாது, மீறி செய்தால், அதற்கு, அபராதத்துடன், ஒன்று முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment