தமிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் நடத்திய போராட்டங்களை அறிவீர்கள். இதன் அங்கமாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.
தமிழக மக்களை தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என்று சொல்வது தேசத்துரோகமா?
பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை அனைவரும் கண்டிப்போம். டாஸ்மாக்கை மூடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம என பல்வேறு
கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் செய்தி மையமும் கண்டனம்
தெரிவித்துள்ளது. மக்கள் செய்தி மையம் நிறுவனரும், சென்னையை சார்ந்த
மூத்தபத்திரிக்கையாளருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
ஜனநாயகத்தின் குரல்வளை
எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை மக்கள் செய்தி மையம் கைது செய்யப்பட்ட
பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் செய்தி மையம் நிறுவனரும், மூத்த
பத்திரிக்கையாளருமான அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
No comments:
Post a Comment