Friday 30 October 2015

டாஸ்மாக் மூடு பாடல்” சமூக ஆர்வலர் கோவன் கைது..... தமிழக அரசிற்கு, காவல் துறைக்கு நன்றி... இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம். சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை



மூடு டாஸ்மாக்கை மூடுஎன்ற பிரபல டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய சமூக ஆர்வலர் கோவன் இன்று அதிகாலை திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சட்டபஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையின் கழுத்துநெறிக்கும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம். மேலும், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசு விடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது. இனிவரும் காலங்களில், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு இதுபோன்ற திடீர் கைது, சிறைவாசம் பரிசாக அளிக்கப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கைது.

கோவன் அவர்களின் கைதுக்குக் காரணமான பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது, பகிரப்பட்டுள்ளது என்பதே, மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இப்பாடல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. டாஸ்மாக் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பம், கருத்து

இந்த சூழலில் பாடியரைக் கைது செய்துள்ளார்கள். பாடியவரைக் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். ஆனால், அவர் மக்களிடம் பரப்பிய கருத்தை..?   பாடலைக் கேட்டவர்களை, பார்த்தவர்களையும் கைது செய்யுமா அரசு..?

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் திறந்து மக்களைச் சீரழிக்கும்மக்கள் துரோகசெயலுக்கு எதிராக குரல் கொடுப்பதுதேசத் துரோககுற்றமா..? 

டாஸ்மாக் எதிர்ப்புப் போரளிகளின் வாயை மூடும் செயலை விடுத்து, டாஸ்மாக்கை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்க முகநூலில் , இப்பாடலைப் பாருங்கள்.. பகிருங்கள் என்று பகிரங்கமாக நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஏராளமான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள்மூடு டாஸ்மாக்கைபாடலை தொடர்ந்து பகிர்ந்து வண்ணம் உள்ளனர். இதுவரை, இப்பாடலைப் பார்க்காத பல ஆயிரம்பேர், இப்போது தேடித்தேடி பார்க்கின்றனர்

இறுதியாக, தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 ”
டாஸ்மாக்குறித்த விவாதத்தை மீண்டும் பரந்துபட்ட மக்களிடம் விவாதப் பொருளாக்கியதற்காக...

இன்னும் பல டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளைக் கைது செய்யுங்கள்.
போராளிகள் படும் தற்காலிகத் துன்பங்கள்... டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடட்டும் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment