நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு கவுரவ ஆலோசகர் பதவி வழங்க நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
கடந்த 18ஆம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர்கள் பதவிக்கு பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், பசுபதி, உதயா, பூச்சிமுருகன், சங்கீதா, சோனியா உள்பட 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தின் முக்கிய பதவி வழங்க நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கு கவுரவ தலைவர் பதவியும், கமல்ஹாசனுக்கு கவுரவ ஆலோசகர் பதவியும் வழங்கலாமா? அல்லது இருவருக்குமே கவுரவ ஆலோசகர் பதவி வழங்கலாமா என அவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, விரைவில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment