Saturday, 31 October 2015

பச்சிளம் பள்ளிக்குழந்தைகளுக்கு வெயில் இன்ஸ்பெக்டருக்கு குளு, குளு கூலிங்கிளாஸ் - பள்ளி குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து பாடம் நடத்திய கூலிங் கிளாஸ் போட்ட போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் – கரூரில் பரபரப்பு



தமிழகம் முழுவதும் ஹெல்மெட் விவகாரம் தலைதூக்கிய போது தற்போது அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது அவசியம் என அனைத்து தர்ப்பினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஹெல்மெட் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரில் மட்டும், தமிழக அளவில் ஹெல்மெட் பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சாதனை எனவும் கருத்தில் கொள்ளலாம். இந்நிலையில் கரூரில் உள்ள சராசரி மனிதர்கள் தங்களது சட்டதிட்டங்களை மதிக்க மாட்டுகிறார்கள் என கருதிய போக்குவரத்து துறை போலீஸார் காவல் துறை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் பள்ளி பயிலும் சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு நீங்கள் தான் உங்கள் அப்பா, அம்மா விடம் சொல்லி ஹெல்மேட் போடச்சொல்ல வேண்டுமென வலியுறுத்தினார். ஹெல்மெட் குறித்த பிரச்சாரம், பாதையை எப்படி கடப்பது, போக்குவரத்து விதிகளை மதிப்பது எப்படி என்பதையும், சிக்னலில் கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் விவரித்துக் கூறினார். இந்த பிரசாரம் வித்யாசமாகவும், நூதனமாகவும் இருந்தது ஒரு பட்சத்தில் இருந்தாலும் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் அப்பாவி குழந்தைகளை வறுத்தெடுத்த காவல்துறைக்கு பல்வேறு கட்சி மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் உங்கள் அப்பா, அம்மாவை ஹெல்மெட் அணிய செய்யுங்கள் போக்குவரத்து போலீஸார் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு அடையும் வகையிலும், போக்குவரத்து விதிகளை பற்றியும் நூதனமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. கொளுத்தும் வெயிலுக்கு உதாரணமாக அவர் கூட கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment