நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அடுத்து தமிழகத்தின் சட்டசபை தேர்தல், இத்தேர்தலுக்காக கூட்டணி என ஒரு சில கட்சிகளும், முதல்வர் வேட்பாளர் அறிவித்து பா.ம.க கட்சியும், நமக்கு நாமே என்ற திட்டத்தின் மூலம் தி.மு.க வை சார்ந்த மு.க.ஸ்டாலினும் பல்வேறு முறையில் தேர்தலை சந்திக்க தயாராகின்றனர். இந்நிலையில் ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர் வை.கோ இந்திய சுதந்திரத்திற்காக போராடி தன் இன்னுயிரை ஈத்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். தமிழனுடைய பாரம்பரியத்தை பறைசாட்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனை மற்ற கட்சிகள் சாதி ரீதியாகவும், இன ரீதியாகவும் மறைத்து வரும் நிலையில் ம.தி.மு.க பொதுசெயலாளர் கயத்தாறில் சிறப்பாக கொண்டாடினார். அந்த நிகழ்வை ம.தி.மு.க வினர் பம்பரமாக சுழன்றபடி ஆங்காங்கே தெரிவித்து வருவது மிகவும் தமிழர்களிடையேயும், சுதந்திர போராட்ட தியாகிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த செய்திகளை ஒரு சில ஊடகங்கள் மூடி மறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி ,.,,
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்து கோட்டை புதிப்பிக்கப்பட்டு இன்றுவரை தமிழனின் பழைய வரலாற்றை பறைசாற்றுகிறது.....!!!
கயத்தாரில் நடந்த கட்டப்பொம்மன் நினைவேந்தல் நிகழ்வில் கட்டப்பொம்மன் வழிவந்த வாரிசு அய்யா திரு #வீமராஜா அவர்கள் தமிழர்களின் நலன் காக்கும் சங்கொலி வாழும் கட்டப்பொம்மன்.... வரலாற்று நாயகன் #வைகோவுடன்.......!!!
இத்துணை நூற்றாண்டுகள் கடந்தும் தமிழனின் தொன்மையான நாகரிகம் வரலாறு இன்றைய இளைய சமுதாயத்தினர் பேசுகிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் ....!!! #வைகோ
இந்த நாட்டிற்கு #வைகோ என்கிற மாமனிதர் கிடைக்காமல் போயிருந்தால் சேர சோழ பாண்டியர்கள் மாமன்னர் மருது பாண்டியர் வீரமங்கை வேலுநாச்சியார் பத்தினி தெய்வம் கண்ணகி பேருந்தேவியார் காமராஜர் முத்துராமலிங்கதேவர் தந்தை பெரியார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா முல்லைப் பெரியார் அணையை கட்டியெழுப்பிய கர்னல் ஜான் பென்னி குயிக் போன்றோர்களின் வரலாறும் ... இன்றைய சமுதாயத்தினர்களுக்கு தெரியாமல் போயிருக்கும்...??? வாழும் தெய்வம் #வைகோ தன்னலம் கருதாமல் எந்நாளும் உளைத்துக்கொண்டு உள்ளார் இதை நாம் நம் கண்முன் பார்க்கிறோம் ..... இப்பேர்பட்ட தலைவர் #வைகோ வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது மிகப்பெரிய வரலாறு.......!!!
நாட்டின் எதிர்கால தூண்களாம் இளைஞர்களே தமிழக மக்களே வரும் 2016 ல் #வைகோவை ஒருமுறை அதிகாரத்தில் அமர்த்துங்கள் இன்னும்
1000 ஆண்டுகள் 1000நம் வம்சாவழி சந்ததியினர் தமிழனின் வரலாற்றை பேச வழிவகை செய்வார்......!!!
1000 ஆண்டுகள் 1000நம் வம்சாவழி சந்ததியினர் தமிழனின் வரலாற்றை பேச வழிவகை செய்வார்......!!!
வாக்களிப்பீர் #பம்பரம் சின்னத்தில்
- என்ற வாசகங்கள் அடங்கிய வார்த்தைகள் பேஸ்புக், டுவீட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வெளியிட்டு வருகின்றன.
No comments:
Post a Comment